விநாயகர் வந்தாரா இல்லையா தெரியவில்லை...
வண்ண வண்ணமாய் உச்சாணிக்கிளை உயர சிலைகள்,
தெருவடைத்து திடீரென்று முளைத்த மேடை சகிதமாய் தீபாராதனை,
வருவோர் போவோரிடம் வசூலிப்பு,
செவிப்பறை கிழிக்கும் ஒலிபெருக்கி சப்தம்,
ஒரு ரூபாய் பூ ஒன்பது ரூபாய்க்கு விற்பனை,
ஒரு நாள் கிராக்கி ஊர் முழுக்க அருகம் புல்லுக்கு,
கோவில்களில் அலை மோதும் கூட்டம்,
ஒட்டு மொத்த நகரமும் தொலைக்காட்சி பெட்டி முன் சரணம்,
அரசு விடுமுறை …
…
விநாயகர் சதுர்த்தி கோலாகலம்.
விநாயகர் வந்தாரா இல்லையா தெரியவில்லை.
ஆனால்,
ஆனால்,
சுத்தமாய் கழுவி துடைத்து விட்ட வீடு,
வாசல்களில் சின்னதும் பெரியதுமாய் வண்ண வண்ண கோலங்கள்,
convent uniform லேயே பார்த்து பழகிய குட்டிப் பாப்பாக்களின் அசத்தலான பட்டு பாவாடை சட்டை,
அவிழ்த்து முடிந்த கூந்தலும், அழகான புடவையுமாய் அற்புதமாய் வீட்டுப் பெண்கள்..
- என நகரத்தின் தினசரி வாழ்வில் தொலைதவற்றை திரும்ப கொண்டு வந்து தந்தது இந்த விநாயகர் சதுர்த்தி!.
- என நகரத்தின் தினசரி வாழ்வில் தொலைதவற்றை திரும்ப கொண்டு வந்து தந்தது இந்த விநாயகர் சதுர்த்தி!.
நன்றி விநாயகரே !
: உணர்வு - மணக்குடியான்.
No comments:
Post a Comment