Sunday, September 16, 2007
Aaha.. I got it.."எது பகுத்தறிவு?"
From www.manakkudiyan.com :
Disclaimer: This article is not supporting or not against any religion or belief or any particular set of people. This article is not supporting any individual or attacking any person totally. This is just an ex-pression on a issue and topic. Thanks.
…………………………………………………..
From the news : Sep 15th, Salem. Karunanidhi Condemns
“If we implement Sethu Samudhram project, Tamil nadu will get economic benefit and the travel time consuming will be reduced. There is no need for ships to go around Srilanka, they can just go through Sethu canal. ….
…
… But people oppose this project in the name of God and Rama. Ramayana never happened. It is a myth. Jawaharlal Nehru told that It is an exaggerated story of ‘Arya–Dravida’ clashes. Even Jayalalitha has petitioned in the court to stop the Sethu project implementation. இவருடையை கட்சி அண்ணாவின் பெயரில் இருக்கிறது. அண்ணாவின்
பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு இப்படி ஒரு வழக்கு போடுகிறார். பகுத்தறிவு கொள்கையை வலியுறுத்திய இந்த நேரத்தில்
உன்னை நினைத்து நான் வருத்தப் படுகிறேன்,வெட்கப் படுகிறேன்....."
.............................................................................................................................
We have discussed enough about Rama sethu, proof from history and records.
His talk on ‘ Pahuttharivu’ and attacking ‘ People do not have ‘Pahutharivu’ even when they lead a party in the name of Anna who awaken a set of people with his ‘ Pahutharivu’. I got some questions and answer on Pahutharivu and same is the focus of this article.
எது பகுத்தறிவு ?
அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு ராமர் பாலத்தை
இடிக்கக் கூடாதுன்னு வழக்கு பொடறது பகுத்தறிவு இல்லன்னா,
வேற எது பகுத்தறிவு?
1. உருவ வழி பாடு, சிலை வழிபாடு, தீபாராதனை, பூமாலை எல்லாம் மூடத்தனம் என்று முழங்கிவிட்டு,
அண்ணாவிற்கும், பெரியாருக்கும் திசையெங்கும் சிலை, பூமாலை,
சமாதியில் அணையா ஜோதி - இது பகுத்தறிவு.
2. சோதிடம், நம்பிக்கை, ராசி என்பது மூட நம்பிக்கை.
எப்பவும் மஞ்சள் துண்டும், தினசரி காலை தியானமும் பகுத்தறிவு.
3. ஏறக்குறைய உலகம் முழுதும் திரையிடப் பட்ட திரைப்படமான
' டா வின்ஸி கோட் ', நீதி மன்றத்தால் அனுமதிக்கப் பட்டும், டெல்லியிலும் பிற இடங்களிலும் திரை இடப் பட்டும் கூட,
தமிழகத்தில் தடை. காரணம் - பிற சமயத்தினரின் நம்பிக்கைக்கும்,
உணர்வுக்கும் மரியாதை.
கோடானு கோடி மக்களின் நம்பிக்கையையும், உணர்வையும்
தகர்க்கும் ராமர் பாலம் தகர்ப்பை யாரேனும் எதிர்த்து கருத்து
கூறினால். அது மூட நம்பிக்கை. மக்களின் நம்பிக்கையைதகர்க்க பாலத்தை
உடைக்க எல்லா முயற்சியும் எடுப்பது - பகுத்தறிவு.
4. எல்லாவறிறிக்கும் ஆரம்பம் விநாயகர் வழிபாடு என்று நம்பியவரை,
' விநாயகர் வழிபாடு ' தமிழரின் பழக்கம் அல்ல. கனக விஜயனில்
தலையில் கல் சுமக்க வைத்து கொண்டு வந்தானே தமிழ் மன்னன். அது தப்பாக புரிந்து கொள்ளப் பட்டது. இது வடக்கிலிருந்து வந்த
மூடத்தனம் ' என்று மேடைப் பேச்சு, அறிக்கை.
தான் தொடங்கும் ' கலைஞர் டீவி' மட்டும், விநாயகர் சதுர்த்தி தினம், பிரம்ம முஹூர்தத்தில் தொடங்க வேண்டும் - இது பகுத்தறிவு.
5. அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக்கொண்டு மத உணர்வை
மதித்தால், பகுத்தறிவு புகட்டிய அண்ணாவிற்கு வெட்கக் கேடு.
' நான் மிக ராசி யானவன், முதன் முதலில் தொழில் தொடாங்கும்
போது நான் வாழ்த்தினால், நல்லது நடக்கும்' - என்று பேசுவது பகுத்தறிவு
6. குல தேய்வ கோயிலுக்கு சாமி கும்பிட அமைச்சர்போனால், காட்டுமிராண்டித்தனம்.
இஃப்தார் விருந்திற்கு தானே சென்று நோன்பு கஞ்சி குடித்தால் - பகுத்தறிவு.
7.ராமாயணம் என்று ஒன்று நடக்கவே இல்லை. வெறும் கட்டுக் கதை, கற்பனை - என்று கூறிவிட்டு,
திடீரென்று ' ராவணன் ஒரு தமிழன்' அதற்கு ஆதாரம் இருக்கிறது எனபேசுவது - பகுதறிவு
...ஆகா...ஆனந்தம் ... புரிந்து கொண்டேன்....
எது பகுத்தறிவு என்று தெளிவடைந்தேன்... அற்புதம்...அபாரம்....
என்னே பகுத்தறிவு.... ஆகா...ஓகோ....
: For white board - " பகுத்தறிவு பகலவன் " என்று அழைக்கப் பட வேண்டும் என
ஆசைப்படும் ' அப்பாவி தமிழன்'.
www.manakkudiyan.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment